Tuesday, 31 December 2013

உடைந்த பானைகள்

Photo: உடைந்த பானைகள் 

பாட்டி காலத்து பவித்திரங்கள் இன்று பத்தாம் 
பசலிகளாய்.....நதியோரம் நற்களி தேடி சக்கரம் 
கொண்டு வடிப்பான் பானை ஒன்றை கலைஞன்....
பானை சமைப்பதனால் அவன் பிரம்மனின் தம்பி...
தன் பசியாற விற்றலும் நாம் விலைகொடுத்தலும்
வாடிக்கை...வடிவான பானை கொண்டு வடி சோறாக்கி 
வயல்வெளியிலே உண்டு....மருத மரநிழலில் அயர்ந்த 
நாட்களுமுண்டு....மட்பானை பொங்கலும் செஞ்சட்டி 
கூளும் இன்னும் வேண்டுமென கேட்கும் எங்கள் 
தெய்வங்கள்...சுவைதான் அங்கு.... அவைக்குற்றம் கூறும்
கூற்றுவனின் கொடிநோய்கள் கோடி தரவில்லை 
மட்பானைகள்...உம்பசுகம் தேடு கலியுலகிலே அந்த பானைகளை 
காண முடியவில்லை கிராமத்து தெருக்களிலும்...உலோகங்களின் 
படை எடுப்பிலே மட்கோட்டைகள் மடிந்துதான் போயின...
மடைமைகளுக்கு புரியாது மட்கோட்டைகள் உடலுக்கு 
கற்கோட்டைகள்..உலோக நவீனங்கள் உண்டாக்கும் வினையென..
நானென்ன கூற நாணமற்ற உலகுக்கு...ஆனாலும் அம்மா முதற்பொங்கல்
ஊட்டிய அந்த பானையை தேடுகிறேன் இன்னமும்....


பாட்டி காலத்து பவித்திரங்கள் இன்று
பத்தாம் பசலிகளாய்.....
நதியோரம் நற்களி தேடி
சக்கரம் கொண்டு வடிப்பான்
பானை ஒன்றை கலைஞன்....
பானை சமைப்பதனால் அவன்
பிரம்மனின் தம்பி...
தன் பசியாற விற்றலும்
நாம் விலைகொடுத்தலும் வாடிக்கை...
வடிவான பானை கொண்டு
வடி சோறாக்கி வயல்வெளியிலே உண்டு....
மருத மரநிழலில் அயர்ந்த நாட்களுமுண்டு....
மட்பானை பொங்கலும் செஞ்சட்டி கூளும் இன்னும்
வேண்டுமென கேட்கும் எங்கள் தெய்வங்கள்...
சுவைதான் அங்கு....
அவைக்குற்றம் கூறும் கூற்றுவனின்
கொடிநோய்கள் கோடி தரவில்லை மட்பானைகள்...
உம்பசுகம் தேடு கலியுலகிலே அந்த
பானைகளை காண முடியவில்லை கிராமத்து தெருக்களிலும்...
உலோகங்களின் படை எடுப்பிலே
மட்கோட்டைகள் மடிந்துதான் போயின...
மடைமைகளுக்கு புரியாது
மட்கோட்டைகள் உடலுக்கு கற்கோட்டைகள்..
உலோக நவீனங்கள் உண்டாக்கும் வினையென..
நானென்ன கூற நாணமற்ற உலகுக்கு...
ஆனாலும் அம்மா முதற்பொங்கல் ஊட்டிய அந்த
பானையை தேடுகிறேன் இன்னமும்....





தீக்குளிக்கும் மேகங்கள்

Photo: தீக்குளிக்கும் மேகங்கள் 

மேகங்கள் யாவும் தீக்குழிக்குள்....உயர மரங்களின் கூடல் 
இன்றி.....மலை முகட்டு மரங்களும் முகில்களும் காதல் 
கொஞ்சினால்தான் மண் விளையும்....பொன் முகாமிடும் 
பூவையர் மேனியிலே....சனநாயக சர்வாதிகாரிகள் மலை முகடுகளை 
தேசியமாக்கினார்கள்....மரங்களை சமவுடைமையாக்கி சாவு மணி 
அடித்தார்கள் சுதேச குடிகளுக்கு......மலைக்காடெங்கும் மனித தலைகளை 
விதைத்தார்கள் தளைகளான கைத்தொழில் பேட்டைகளில்....வருணர்கள்
வித்தை காட்டினாலும் அர்ஜுனர்கள் வில் எறிந்தாலும்...இனி வாராது 
இந்திர பூசைகள்....தகிக்கும் சூரியனையும் அணைக்க முடியாமல்....
பசுமைக்காடுகளின் நேசம் இன்றியும் எங்கள் மேகங்கள் தீக்குழிக்குள்...


மேகங்கள் யாவும் தீக்குழிக்குள்....
உயர மரங்களின் கூடல் இன்றி.....
மலை முகட்டு மரங்களும் முகில்களும் காதல்
 கொஞ்சினால்தான் மண் விளையும்....
பொன் முகாமிடும் பூவையர் மேனியிலே....
சனநாயக சர்வாதிகாரிகள்
மலை முகடுகளை தேசியமாக்கினார்கள்....
மரங்களை சமவுடைமையாக்கி
சாவு மணி அடித்தார்கள் சுதேச குடிகளுக்கு......
மலைக்காடெங்கும் மனித தலைகளை விதைத்தார்கள்
தளைகளான கைத்தொழில் பேட்டைகளில்....
வருணர்கள் வித்தை காட்டினாலும்
அர்ஜுனர்கள் வில் எறிந்தாலும்...
இனி வாராது இந்திர பூசைகள்....
தகிக்கும் சூரியனையும் அணைக்க முடியாமல்....
பசுமைக்காடுகளின் நேசம் இன்றியும்
எங்கள் மேகங்கள் தீக்குழிக்குள்.



மேற்பரப்பிளுவிசை




கடுகு மலையோரம் கவின்மிகு நதியொன்று....
கற்றவரும் வருவர் மற்றவரும் வருவர்
களிப்புடனே பொழுது போக்கிட....
நதியின் அடிவானத்திலே ஆங்கேயோர் அற்புத புவனம்....
படகுகளும் அறியாது...தூண்டில்களும் உணராது...
தொலைதூர பாய உலகிலே பாளும் உலகின் மாயங்கள் இல்லை...
மச்சங்களும் மிச்சங்களும் கூடியே வாழ்ந்தன...
நாசாவின் கோளொன்று உரைத்தது மெய்யுரையொன்று...
அடுத்து வரும் விண்கல்லொன்று விழுமிடம் கடுகுமலை நதிதான்...
நதி தேய பள்ளம் ஒன்று உயருமென...
சலலோகம் பதைத்தது இறுதி இராப்போசனமும் இறங்கியது விடமென...
விதியின் விடுகதை நாளும் புலர்ந்தது...
கல்லும் வந்தது....
நதியின் நீர்க்கூறுகள் வலுவான பிணைப்பொன்றை கொண்டன...
மேற்ப்பரப்பிளுவிசையதனை தாண்டி நகரவில்லை விண்கல்...
அது கரைந்தே போயிற்று கனவாக...
கவின் மிகு நதியும் பாய உலகும் இன்றும் உயிர்ப்புடன் உவகையுடன்
ஆனால் உறைப்புடன் உறுதியுடன்...
உன்னிலும் மேற்பரப்பிளுவிசைகள் மையம் கொண்டால்
நீதான் நியூட்டனின் நான்காம் விதி...
உணர்வாய் உயர்வாய்......