Wednesday, 1 January 2014

வாழைகளின் வாழ்த்து

வந்தனங்கள் உங்களுக்கு...புது ஒளி பிறக்கும்
நாட்போதிலே புது கவியொன்று வாழைத்தோட்டத்திலிருந்து....
புள்ளினங்கள் புது ராகம் பாடும் புதுக்காலையிலே
ஒளிவிளக்கேற்றி அன்போடு எம் மேனியில் புது நெல்
பரவி பட்சணம் படைத்து பரமனிடம் இறைஞ்சுவீர்...
நண்பகல் பொழுதினிலே நல்லதோர் விருந்து நம்மீது....
அநாதரவாய் நிற்கும் தெருகாவலனும் மீதியிலை உண்டு
கொண்டாடுவான் புத்தாண்டை...நம் கனிகள் நாளை இனிக்கும்
எவருக்கும்...யாவரையும் வரவேற்போம் வாசலில் நின்று....
கலாசாரத்தின் ஆணிவேராய் நிலை நிறுத்திய உங்களுக்கு
நன்றிகள் பல...நன்னாளிலே உங்களிடம் சிறு இறைஞ்சுதல்...
குலை தள்ளிய எங்களை வெட்டி எறியாதீர் வீதியிலே...
குலக்கேடு நாசம் இதை கூறியதும் புலவர்களே....
நாம் பிரசவிக்கும் குட்டிகளை பால் மணம் மாறு முன்பே
பிரிக்காதீர் எம்மிடமிருந்து...பாவம் அந்த பால் மனங்கள்...
நுகர்வு பொருளாய் நினையாது உறவாக நினையுங்கள்
இந்த வாழைகளை...மீண்டும் வாழ்த்துகிறோம்.....
இவ்வண்ணம் வாழையடி வாழையாய் உங்கள் சேவையில்
வாழை மரங்கள் ....                       



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment