
பாட்டி காலத்து பவித்திரங்கள் இன்று
பத்தாம் பசலிகளாய்.....
நதியோரம் நற்களி தேடி
சக்கரம் கொண்டு வடிப்பான்
பானை ஒன்றை கலைஞன்....
பானை சமைப்பதனால் அவன்
பிரம்மனின் தம்பி...
தன் பசியாற விற்றலும்
நாம் விலைகொடுத்தலும் வாடிக்கை...
வடிவான பானை கொண்டு
வடி சோறாக்கி வயல்வெளியிலே உண்டு....
மருத மரநிழலில் அயர்ந்த நாட்களுமுண்டு....
மட்பானை பொங்கலும் செஞ்சட்டி கூளும் இன்னும்
வேண்டுமென கேட்கும் எங்கள் தெய்வங்கள்...
சுவைதான் அங்கு....
அவைக்குற்றம் கூறும் கூற்றுவனின்
கொடிநோய்கள் கோடி தரவில்லை மட்பானைகள்...
உம்பசுகம் தேடு கலியுலகிலே அந்த
பானைகளை காண முடியவில்லை கிராமத்து தெருக்களிலும்...
உலோகங்களின் படை எடுப்பிலே
மட்கோட்டைகள் மடிந்துதான் போயின...
மடைமைகளுக்கு புரியாது
மட்கோட்டைகள் உடலுக்கு கற்கோட்டைகள்..
உலோக நவீனங்கள் உண்டாக்கும் வினையென..
நானென்ன கூற நாணமற்ற உலகுக்கு...
ஆனாலும் அம்மா முதற்பொங்கல் ஊட்டிய அந்த
பானையை தேடுகிறேன் இன்னமும்....
No comments:
Post a Comment