Wednesday, 1 January 2014

பறவைகளின் புத்தாண்டு 


புதிதான தேடல்கள் ....தொலைதூர நோக்குகள்...
கனதூர பறப்புகள்.....உயிரான உறவுப் பிணைப்புகள்....
பறவைகள்தான் புத்தாண்டின் முதுசங்கள்.....
மதுப்போத்தல்களிலும் மட்டமான இசையிலும்
வாழ்த்துச் சொல்வோரே உணர்வீர் இது பறவைகளுக்கான
திருநாள்...நாளொன்றின் தேடலுடன் நன்கு சேமித்து
நயமான கூடு கட்டி...துணையை அங்கிருத்தி அன்புடன்
காதல் பேசி...அப்பாலும்  நேயமுடன் அடைகாத்து....
இரை தேடி ஊட்டி வளர்த்து....பறப்பு சொல்லி கொடுத்து....
அன்பே சிவமெனே அருமையாய் சிறக்கிறது பறவையின்
நாட்கள்....முற்றத்தில் பறவை ஒன்று வந்தாலே எப்போதடா
விருந்தாக்கலாம் என மேவுகிறது குரங்கு மனசு.....திருந்துவதற்கு
இதோ மலர்கிறது புத்தாண்டு...பறவையாய் மனதை வை....
பரந்ததாய் சிந்தி...மண்ணில் மலரும் விண்ணகம்...
உன் நாளைய உணவை புள்ளினங்களுக்கும் பகிர்ந்தளி...
புதுப் பறவைகள் உன்னுள் பூபாளம் பாடும்....புத்தாண்டு
அர்த்தப்படும்...புது வழிகள் பிறக்கும்...



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment