Lalithakopan's Poems : பறவைகளின் புத்தாண்டு
புதிதான தேடல்கள்....தொலைதூர...: பறவைகளின் புத்தாண்டு புதிதான தேடல்கள் ....தொலைதூர நோக்குகள்... கனதூர பறப்புகள்.....உயிரான உறவுப் பிணைப்புகள்.... பறவைகள்தான் ...
Wednesday, 1 January 2014
பறவைகளின் புத்தாண்டு
புதிதான தேடல்கள்
....தொலைதூர நோக்குகள்...
கனதூர
பறப்புகள்.....உயிரான உறவுப் பிணைப்புகள்....
பறவைகள்தான்
புத்தாண்டின் முதுசங்கள்.....
மதுப்போத்தல்களிலும்
மட்டமான இசையிலும்
வாழ்த்துச் சொல்வோரே
உணர்வீர் இது பறவைகளுக்கான
திருநாள்...நாளொன்றின்
தேடலுடன் நன்கு சேமித்து
நயமான கூடு
கட்டி...துணையை அங்கிருத்தி அன்புடன்
காதல்
பேசி...அப்பாலும் நேயமுடன்
அடைகாத்து....
இரை தேடி ஊட்டி
வளர்த்து....பறப்பு சொல்லி கொடுத்து....
அன்பே சிவமெனே
அருமையாய் சிறக்கிறது பறவையின்
நாட்கள்....முற்றத்தில்
பறவை ஒன்று வந்தாலே எப்போதடா
விருந்தாக்கலாம் என
மேவுகிறது குரங்கு மனசு.....திருந்துவதற்கு
இதோ மலர்கிறது
புத்தாண்டு...பறவையாய் மனதை வை....
பரந்ததாய்
சிந்தி...மண்ணில் மலரும் விண்ணகம்...
உன் நாளைய உணவை
புள்ளினங்களுக்கும் பகிர்ந்தளி...
புதுப் பறவைகள் உன்னுள்
பூபாளம் பாடும்....புத்தாண்டு
அர்த்தப்படும்...புது
வழிகள் பிறக்கும்...
வாழைகளின் வாழ்த்து
வந்தனங்கள்
உங்களுக்கு...புது ஒளி பிறக்கும்
நாட்போதிலே புது
கவியொன்று வாழைத்தோட்டத்திலிருந்து....
புள்ளினங்கள் புது
ராகம் பாடும் புதுக்காலையிலே
ஒளிவிளக்கேற்றி
அன்போடு எம் மேனியில் புது நெல்
பரவி பட்சணம் படைத்து
பரமனிடம் இறைஞ்சுவீர்...
நண்பகல் பொழுதினிலே
நல்லதோர் விருந்து நம்மீது....
அநாதரவாய் நிற்கும்
தெருகாவலனும் மீதியிலை உண்டு
கொண்டாடுவான்
புத்தாண்டை...நம் கனிகள் நாளை இனிக்கும்
எவருக்கும்...யாவரையும்
வரவேற்போம் வாசலில் நின்று....
கலாசாரத்தின்
ஆணிவேராய் நிலை நிறுத்திய உங்களுக்கு
நன்றிகள்
பல...நன்னாளிலே உங்களிடம் சிறு இறைஞ்சுதல்...
குலை தள்ளிய எங்களை
வெட்டி எறியாதீர் வீதியிலே...
குலக்கேடு நாசம் இதை
கூறியதும் புலவர்களே....
நாம் பிரசவிக்கும்
குட்டிகளை பால் மணம் மாறு முன்பே
பிரிக்காதீர்
எம்மிடமிருந்து...பாவம் அந்த பால் மனங்கள்...
நுகர்வு பொருளாய்
நினையாது உறவாக நினையுங்கள்
இந்த
வாழைகளை...மீண்டும் வாழ்த்துகிறோம்.....
இவ்வண்ணம் வாழையடி
வாழையாய் உங்கள் சேவையில்
வாழை மரங்கள்
....
Subscribe to:
Comments (Atom)

